சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை பூங்கா தலைமை தபால் அலுவலகம் மற்றும் அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பொதுமக்களின் வசதிக்காக தபால் பதிவு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த இரு தபால் நிலையங்களிலும் இனி அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை பதிவு சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நேரத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விரைவு தபால் சேவைகள், பார்சல் சேவைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும். பகல் நேரங்களில் பணிச்சுமை காரணமாக தபால் நிலையங்களுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இந்த நீட்டிக்கப்பட்ட சேவை நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.