சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

சென்னை புழல் பகுதியில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை மற்றும் மகளிர் சிறை என 3 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், புழல் மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் உள்ள கைதிகளின் நிலை, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.தொடர்ந்து, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கும் கூடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.