சென்னை: பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை: பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் கைது

சென்னை: பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் கைது

சென்னையில் பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 9 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் நிஷாந்தி (33), தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அபினேஷ் கண்டித்த நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது நிஷாந்தி, அபினேஷை கட்டையால் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தியை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்தி 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நிஷாந்தி பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே 15 வழக்குகள் உள்ளிட்ட கஞ்சா, திருட்டு, அடிதடி என மொத்தம் 27 குற்ற வழக்குகள் அவர் மீது இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.