சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை: ஒரே நாளில் 14,778 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை: ஒரே நாளில் 14,778 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டது

சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை: ஒரே நாளில் 14,778 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டது

சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்புக் கட்டிகளை கையாளப்பட்டு புதிய சாதனை உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ந்தேதி சென்னை துறைமுகத்தின் ஜவஹர் கப்பல் தளத்தில் ‘எம்.வி. சுப்ரா மோனார்க்’ என்ற சரக்குக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் கப்பலில் வார்ப்பு இரும்புக் கட்டிகளை ஏற்றும் பணியின்போது, ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டது. இதன் மூலம் சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, ஜூலை 30-ந்தேதி ‘எம்.வி. அகியா சாரிஸ்’ கப்பல் மூலம் ஒரே நாளில் 13,208 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து 14,778 டன் கையாளப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு பங்களித்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களை சென்னை துறைமுக தலைவர் சச்சின் எஸ். குர்வே பாராட்டினார் என துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.