சென்னை திரு.வி.க.நகரில் ரூ.49.70 லட்சத்தில் புதிய பல்நோக்கு மையம் திறப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை திரு.வி.க.நகரில் ரூ.49.70 லட்சத்தில் புதிய பல்நோக்கு மையம் திறப்பு

சென்னை திரு.வி.க.நகரில் ரூ.49.70 லட்சத்தில் புதிய பல்நோக்கு மையம் திறப்பு

சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.750 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், 2024–25ஆம் ஆண்டுக்கான வார்டு மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ளது.திறப்பு விழாவில் மேயர் பிரியா கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ. வேலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த பல்நோக்கு மையம், அப்பகுதி மக்களின் சமூக மற்றும் பொதுப் பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.