சென்னை தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

சென்னை தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதையொட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் தள பதிவில், வரலாற்றுப் பெருமை, பண்பாட்டு சிறப்பு மற்றும் நவீன வளர்ச்சியுடன் திகழும் சென்னை மாநகரம் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சென்னையின் வளர்ச்சியும் பெருமையும் தொடர்ந்து உயர வேண்டும் என்றும், மாநகர மக்கள் அனைவரும் வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.