விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல்–போத்தனூர் இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரல்–போத்தனூர் (06023)சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 6.58 மணிக்கு வந்து, 7 மணிக்கு அங்கிருந்து புறப்படும். இதேபோல், போத்தனூர்–சென்னை சென்டிரல் (06024) சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும். திருப்பூருக்கு நள்ளிரவு 12.08 மணிக்கு வரும் இந்த ரெயில், 12.10 மணிக்கு அங்கிருந்து புறப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.