தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (அக். 20) இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் அக். 26-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் நிலவும் மற்றொரு வளிமண்டலச் சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அக். 20: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை காணப்படலாம். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். மழையின்போது இடியுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அக். 21 முதல் 26 வரை மழை நிலவரம் அக். 21:தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 22: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அக். 23:நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக். 24: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அக். 25: திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அக். 26: சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் மழையுடன் இடியுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை அக். 20 முதல் 24-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை முன்னறிவிப்பு இன்று (அக். 20): சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30–31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். நாளை (அக். 21):வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 30–31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை அக். 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். அக். 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் கேரளா–கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் இதே வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் சம்பந்தப்பட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.