சீனாவில் நடைபெற்ற செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்ற நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் மற்றும் போலந்தின் ஹியூபர்ட் ஹுர்காக்ஸ் நேருக்கு நேர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிடோவிச், ஹுர்காக்ஸை 6-4, 7-6(7) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் செங்டு ஓபன் தொடரின் சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார். இதற்கு முன் நடைபெற்ற அரையிறுதியில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டேவிடோவிச் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.