செங்கல்பட்டில் சோகம்: பஞ்சர் சரிசெய்யும்போது லாரி டயர் வெடித்து தொழிலாளி பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செங்கல்பட்டில் சோகம்: பஞ்சர் சரிசெய்யும்போது லாரி டயர் வெடித்து தொழிலாளி பலி

செங்கல்பட்டில் சோகம்: பஞ்சர் சரிசெய்யும்போது லாரி டயர் வெடித்து தொழிலாளி பலி

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே லாரி டயருக்கு பஞ்சர் சரிசெய்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர், டயர் வெடித்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பம்மல் மூங்கில் ஏரி மசூதி தெருவைச் சேர்ந்த அஷ்ரப் அலி (38), தனது உறவினரான காதர் பாஷாவின் பஞ்சர் கடையில் பணியாற்றி வந்தார். அந்தக் கடை திருநீர்மலை சர்வீஸ் சாலையில் அமைந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை, லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் சரிசெய்யும் பணியில் அஷ்ரப் அலி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.இந்த விபத்தில் அவரது தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஷ்ரப் அலி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.