சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

25 Jul 2026 www.thinathulir.com

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார்.சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா, தன்னைவிட 20 வயது இளைய பெண்ணை காதலிக்கும் கதைக்களம் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், நவின் நூலி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன் வெளியான முதல் பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ‘வெட்டிங் சாங்’ வெளியாகியுள்ளது. நடிகர் கென் எழுதியுள்ள இந்த பாடலை சூர்யா பாடியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலில் சூர்யாவின் குரலும் நடனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.