சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய தொழில் துறைகளின் முக்கிய மையமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வரும் நிலையில், இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பது உலக நாடுகளிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. டாவோஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் 57-வது ஆண்டு கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமான நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட முன்னணி சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், அறிஞர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினரும் கலந்துகொள்ள உள்ளனர். உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோர் விடுத்த அழைப்பின் பேரில் முதல்-அமைச்சர் விஜய் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுவரை தமிழகத்தின் சார்பில் பெரும்பாலும் தொழில்துறை அமைச்சர்களே டாவோஸ் மாநாட்டில் பங்கேற்று வந்துள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சரே நேரடியாகக் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்திப்பதன் மூலம், தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அரசின் தொழில் கொள்கைகள் குறித்து உலகளவில் எடுத்துரைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.