சுவாசத் தொற்று அதிகரிப்பு: மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சுவாசத் தொற்று அதிகரிப்பு: மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

சுவாசத் தொற்று அதிகரிப்பு: மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக் காலமாக பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெங்கு, கொரோனா, சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை உள்ளிட்ட தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ஸ்கிரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக்காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றில் சில நோய்த்தொற்றுகள் சுவாசத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டவை. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பைக் காட்டிலும் சுவாசத் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த வகையான தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியவை. ஆனால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும், மருத்துவமனைகள் மூலமாகவும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அலட்சியம் காட்டாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.