சுதந்திர தினம்: சென்னையில் நாளை ஆளுநர் தேநீர் விருந்து ரத்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சுதந்திர தினம்: சென்னையில் நாளை ஆளுநர் தேநீர் விருந்து ரத்து

சுதந்திர தினம்: சென்னையில் நாளை ஆளுநர் தேநீர் விருந்து ரத்து

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சி இந்த ஆண்டு நாளை நடைபெறாது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படும். இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறைப் பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்பது வழக்கம்.இதனால் இந்த ஆண்டும் மக்கள் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரளாவுக்குச் செல்ல உள்ளதால், சென்னையில் தேநீர் விருந்து நடைபெறாது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. மேலும், அவர் நாளை இரவு மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.