சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புலன் விசாரணைப் பணிகளில் திறமையாகச் செயல்பட்டதற்கும், பணியில் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றியதற்கும் 10 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.இந்தப் பட்டியலில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சி. ஜெயஸ்ரீ மற்றும் நா. தமிழரசி, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் கொ. அழகுராஜ், திருச்சி மாநகர ஒருங்கிணைந்த குற்றப்பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் ந. தனுசியா, கோவை மாநகர தனிச் சிறுவர் காவல் உதவிப் பிரிவு ஆய்வாளர் சே. லதா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.மேலும், சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தின் காவல்துறை உதவித் தலைவர் வி. கோமதி, பெரம்பலூர் மாவட்ட கைகளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மா. சித்ரா, விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூர் காவல் நிலைய ஆய்வாளர் ரா. வினதா, சிவகங்கை மாவட்ட குற்றப் பதிவேட்டு கூடத்தின் காவல் ஆய்வாளர் கோ. மகாலெட்சுமி மற்றும் திருநெல்வேலி மாநகர மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் ச. விஜயகுமார் ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல், பொதுமக்களுக்கான சேவையில் தன்னலமின்றி சிறப்பாகப் பணியாற்றியதற்காக 5 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.இந்தப் பிரிவில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் டாக்டர் வி. சசி மோகன், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக காவல் கண்காணிப்பாளர் தெ. சண்முக பிரியா, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் சி.எம்.ஆர். மணிமொழியன், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறையின் தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளர் க. மதன் மோகன் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்தின் தலைமை காவலர் மு. ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விருது பெறும் ஒவ்வொருவருக்கும் எட்டு கிராம் எடையுள்ள தங்கப் பதக்கத்துடன் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்குவார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.