சீனு ராமசாமியிசீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடுன் “இடிமுழக்கம்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

சீனு ராமசாமியிசீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடுன் “இடிமுழக்கம்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடு

சீனு ராமசாமியிசீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடுன் “இடிமுழக்கம்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீடு

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘இடிமுழக்கம்’திரைப்படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ‘கானா விளக்கு மயிலே...’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்...’ என்ற இந்த இரு குத்துப்பாடல்களையும் இயக்குநர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட தனித்துவமான கதைகளைக் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் அடுத்த படைப்பாக ‘இடிமுழக்கம்’ உருவாகியுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த திரைப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.இதற்கிடையில், ‘இடிமுழக்கம்’ மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘லட்சியம்’திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு விளக்கம் அளித்த சீனு ராமசாமி, இது ரீமேக் அல்ல என்றும், தமிழ் சமூகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய கதை என்றும் தெரிவித்தார். மேலும், இப்படத்தின் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து எழுதியுள்ளதாகவும் கூறினார்.படத்தின் இசையை என்.ஆர். ரகுநந்தன் அமைத்துள்ளார். வைரமுத்து எழுதிய ‘கானா விளக்கு மயிலே...’ பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். ‘அடி தேனி சந்தையில்...’ பாடலை லா. வரதன் எழுதியுள்ள நிலையில், ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர்.தென் மாவட்டங்களை பின்னணியாகக் கொண்ட பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இறைச்சிக் கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் செவிலியராகவும் நடித்துள்ளனர். மேலும் எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, இசக்கி ரகு, பாடகர் ஆண்டனி தாசன், அலன் டால்ஸ்டாய், வெற்றி குமரன், பில்லா டேவிட் மற்றும் மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.