சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான 3-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, செக்குடியரசைச் சேர்ந்த 20 வயதான நிகோலா பார்துன்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சபலென்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பார்துன்கோவா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சிஞ்சா கிராஸ், யாஸ்ட்ரிம்ஸ்காவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.