சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

சிவகங்கை அருகே கண்மாய் பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த காளையார்கோவிலைச் சேர்ந்த இரு இளைஞர்களை மர்ம கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சொகுசு காரில் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் காரை நிறுத்திய அவர்கள், அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென இளைஞர்களை நோக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கண்மாய் பகுதியை நோக்கி ஓடியுள்ளனர். ஆனால், அவர்களை விடாமல் பின்தொடர்ந்த மர்ம கும்பல் இருவரையும் விரட்டிப் பிடித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.