சிவகங்கையில் இன்று முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சிவகங்கையில் இன்று முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்

சிவகங்கையில் இன்று முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள மருதுபாண்டியர்கள் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் நினைவு தின நிகழ்ச்சிகளை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். திருப்பத்தூரில் அக்டோபர் 24-ந்தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவு தின விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. இதேபோல், அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவிலில் பொதுமக்கள் சார்பில் மருதுபாண்டியர்கள் நினைவு தின நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, அக்டோபர் 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டம் (பி.என்.எஸ்.எஸ்.) பிரிவு 163 (1)-ன் கீழ், பழைய சட்டமான 144-ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.