சிவகங்கை: தாசில்தார் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சிவகங்கை: தாசில்தார் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

சிவகங்கை: தாசில்தார் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(வயது 56). இவர் சிவகங்கையில் தனி தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்று இருந்தனர். மதியம் தாசில்தார் சாந்தியின் மருமகள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடி யாக சாந்திக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.. வீட் டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். இது தொடர் பாக சாந்தி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார்.சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஆசிஷ் புனியா ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர் மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.