சிறையில் உயிரிழந்த சபரிவர்மன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Jul 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Jul 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சிறையில் உயிரிழந்த சபரிவர்மன்

சிறையில் உயிரிழந்த சபரிவர்மன்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மன்: உடற்கூராய்வில் 19 இடங்களில் காயம் கண்டறியப்பட்டதாக தகவல் நாகர்கோவில், ஜூலை 14: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதித்துறை கண்காணிப்பில் நடைபெற்ற உடற்கூராய்வில், சபரிவர்மனின் உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கை, கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்கள் இருப்பதுடன், வலது கையில் முறிவும் இருந்ததாக கூறப்படுகிறது. சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் சிறை வார்டன் உட்பட மூன்று சிறைத்துறை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.