சிறையில் அன்பில் மகேஷை 2-வது முறையாக சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சிறையில் அன்பில் மகேஷை 2-வது முறையாக சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சிறையில் அன்பில் மகேஷை 2-வது முறையாக சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கைது செய்தனர். இதையடுத்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாகச் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர்.