சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்

சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்

சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடியதால் பொதுமக்கள் அவதி — சிறுவர்கள் வெளியே செல்ல அச்சம்; விபத்து, நோய் பரவும் அபாயம் சின்னமனூர், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால், சந்தை புதுத்தெரு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சந்தை புதுத்தெருவில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே, மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி, தொடர்ந்து தெருவில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. நோய் பரவும் அபாயம் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இது முக்கியமான சாலையாக இருப்பதால், கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் ஓடுவதால்வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. சாலையின் நிலை சரியாக தெரியாத நிலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுவதற்கான காரணத்தை கண்டறிந்து, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் முறையாக வெளியேறும் வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி, சாலையை சுத்தம் செய்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சபரி - சின்னமனூர் நகர செய்தியாளர்