சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் – வரலாறும் சிறப்புகளும்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் – வரலாறும் சிறப்புகளும்

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் – வரலாறும் சிறப்புகளும்

சிங்கப்பூரின் பழமையானதும் புகழ்பெற்றதுமான இந்து ஆலயங்களில் முக்கியமானது ஸ்ரீ மாரியம்மன் கோவில். சைனா டவுன் பகுதியில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள இக்கோவில், 1973-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழர்களின் பங்களிப்புடன் 1827-ம் ஆண்டு இந்த ஆலயம் உருவானது. கோவிலின் மூலஸ்தானத்தில் மாரியம்மன் பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நாராயணபிள்ளை. 1822-ம் ஆண்டு கோவில் அமைப்பதற்காக நிலம் வழங்க அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி முன்வந்தது. இதையடுத்து சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 1827-ம் ஆண்டு ஆலயத்திற்கான அடித்தளப் பணிகள் தொடங்கின. கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் கொண்டு வந்த அம்மன் சிலையை வைத்து, மரப்பலகைகள் மற்றும் கூரையால் சிறிய குடில் அமைக்கப்பட்டது. அந்த அம்மன் சிலை ‘சின்ன அம்மன்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கியது. பின்னர் 1862-ம் ஆண்டு கோவில் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போது மூலவராக வழிபடப்படும் பெரிய அம்மன் சிலை எப்போது இக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. சுமார் ஒரு நூற்றாண்டு காலம் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்த ஆலயத்தில், 1962-ம் ஆண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கோவில் புதுப்பிக்கப்பட்டதுடன், திருமண மண்டபம், அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் உருவாக்கப்பட்டன. தற்போது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி சிங்கப்பூர் சென்ற தமிழர்களுக்கு இந்தக் கோவில் முக்கியமான ஆதரவிடமாகவும் இருந்துள்ளது. வேலை அல்லது நிலையான தொழில் கிடைக்கும் வரை வாழ்வாதாரம் தேடி வந்தவர்கள் கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சீனர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி விழாவில் சீனர்கள் கணிசமான அளவில் பங்கேற்கின்றனர். மேலும், கோவில் திருப்பணிகளுக்கும் அவர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.