சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் - 3 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் - 3 பேர் பலி

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் - 3 பேர் பலி

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விமான கேப்டன் உட்பட 3 பேர் பலியானதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் ஏமன் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் அரசியல் மோதலின் தாக்கமும் ஏமன் உள்நாட்டுப் போரில் எதிரொலித்து வருகிறது. இதனால், இரு நாடுகளும் ஏமனில் எதிரெதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து மறைமுகமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசுப் படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த புதன்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை ஏவினர். தாக்குதல் நடைபெற்ற உடனேயே ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது, இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.