சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சவுகார் ஜானகி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 94.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சவுகார் ஜானகியின் மறைவு தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.70 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அவர், பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த சவுகார் ஜானகி, பத்மஸ்ரீ, கலைமாமணி, நந்தி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்த விஜய், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.