சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.அதன்பிறகு நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே, வெள்ளி விலையில் தொடர்ந்து 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.