சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,255-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.110 அதிகரித்திருந்தது. இதையடுத்து நேற்று காலை தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,112-க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1,13,240-க்கும், கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.