சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கும், ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.14,270-க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும், ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.14,290-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் ரூ.1,13,640-க்கும், ஒரு கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.