சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் கண்டிப்பு.. பிளஸ்-1 மாணவி தற்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் கண்டிப்பு.. பிளஸ்-1 மாணவி தற்கொலை

சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் கண்டிப்பு.. பிளஸ்-1 மாணவி தற்கொலை

மதுரை மாவட்டத்தில், சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்ததாக கூறப்படும் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்திஸ்வரன் - ஆனந்த லட்சுமி தம்பதியின் 16 வயது மகள் ஜீவிதா. இவர் அலங்காநல்லூர் அருகேயுள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.இந்த நிலையில், படிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என ஆசிரியர் ஒருவர் ஜீவிதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சமயநல்லூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜீவிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, மாணவி படித்து வந்த அரசு பள்ளி முன்பு அவரது உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்துக்கு காரணமானதாக கூறப்படும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.