சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு: நடிகை கங்கனா ரனாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு: நடிகை கங்கனா ரனாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு: நடிகை கங்கனா ரனாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு

நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பதிவுகள் சமூகத்தில் மோதல்களை உருவாக்கும் வகையிலும், பொது அமைதியைப் பாதிக்கும் நோக்கத்திலும் இருப்பதாகக் கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, சிம்லாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அதுல் சர்மா, கடந்த 12-ஆம் தேதி இமாசலப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அனுப்பினார். அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக கங்கனா வெளியிட்ட கருத்துகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சோனியா காந்தி குறித்தும் அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், சிம்லா போலீசார் கங்கனா ரனாவத் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 196, 353, 356 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை சிம்லா காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.