சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.77.16 லட்சம், 1.315 கிலோ தங்கம் காணிக்கை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.77.16 லட்சம், 1.315 கிலோ தங்கம் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.77.16 லட்சம், 1.315 கிலோ தங்கம் காணிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் மாதத்திற்கு இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்திற்கான முதல் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், கோவில் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. எண்ணிக்கையின்போது, உண்டியல்களில் ரூ.77 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. மேலும், 1 கிலோ 315 கிராம் தங்கம், 1 கிலோ 540 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்தன. இதுதவிர, 172 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் 1,081 வெளிநாட்டு நாணயங்களும் உண்டியல்களில் இருந்து பெறப்பட்டன. பித்தளைப் பொருட்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.