சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி மூதாட்டி பலி!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி மூதாட்டி பலி!

சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி மூதாட்டி பலி!

டெல்லி நரிலா பகுதியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.நரிலா பகுதியில் சாலையோரமாக ஊர்மிளா என்ற 70 வயது மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஊர்மிளா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுபம் என்பது தெரியவந்தது.மேலும், சுபத்தின் தந்தை அரியானா மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுபம் சிறையில் அடைக்கப்பட்டார்.