சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம்: தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம்: தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம்: தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 6 மொழிகளில் பயன்படுத்தக்கூடிய புதிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த வசதி கிடைக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. மறுநாள் 17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்குகின்றன. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த சீசனில் பக்தர்கள் சபரிமலை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையில், sabariportaldcpta.in என்ற பெயரில் புதிய இணையதள போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நிசாமுதீன் கூறுகையில், பக்தர்கள் செல்போன் மற்றும் கணினி மூலம் பயன்படுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் QR குறியீடு வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் சாட்பாட் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சபரிமலை தொடர்பான தேவையான தகவல்களை பக்தர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என்றார். மேலும், இந்தத் தளத்தின் வாயிலாக பக்தர்கள் தங்களது குறைகளையும் புகார்களாகப் பதிவு செய்யலாம். காணாமல் போனவர்கள் மற்றும் தவறவிடப்பட்ட பொருட்கள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்தால், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடங்கள், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் பக்தர்கள் தெரிந்துகொள்ளலாம். பக்தர்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.