சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் திறக்கப்படுகிறது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் திறக்கப்படுகிறது

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் திறக்கப்படுகிறது

உலகப் புகழ்பெற்ற கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும்.இந்த நிலையில், மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் தொடங்குவதை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, 17-ம் தேதி காலை 5 மணி முதல் 21-ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். பின்னர் கோவில் நடை மூடப்படும்.மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவில் நடை மீண்டும் 24-ம் தேதி திறக்கப்படுகிறது. அதன் பிறகு, 28-ம் தேதி இரவு 10 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.