சென்னை: வாகன சாகசங்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை: வாகன சாகசங்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: வாகன சாகசங்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை மாநகர் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட தீவிர வாகனச் சோதனையில், வாகன சாகசங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டவை உள்ளிட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 3-ம் தேதி நள்ளிரவு நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம், ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கல்லூரி மாணவர் குகன் (21), பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஐஐடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை பின்னால் வந்த சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் விபத்து நேரத்தில் அங்கு இருந்தவர்கள் யார், அந்த பைக்கை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதேபோல், வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகிலும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே இடத்தில் திரண்டு இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில், வாகன சாகசங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பதிவு எண் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்கள் பயன்படுத்திய 2,000 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அபாயகரமான வாகன சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆபத்தான பயணங்களைத் தடுப்பதற்கும் கடுமையான வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.