சென்னை: மழை வெள்ளத்தை சமாளிக்க 650 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைப்பு..!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை: மழை வெள்ளத்தை சமாளிக்க 650 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைப்பு..!

சென்னை: மழை வெள்ளத்தை சமாளிக்க 650 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைப்பு..!

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் வெள்ளநீரை விரைந்து அகற்றுவதற்காக 100 எச்.பி. திறன் கொண்ட 150 உயர் திறன் மோட்டார் பம்புகளும், டிராக்டர்கள் மூலம் இயக்கக்கூடிய 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 45 இடங்களில், 100 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்புகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த பம்புகள் வெள்ளநீரை வெளியேற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுதல், சாலைகளைப் பராமரித்தல், உணவுக்கூடங்கள் மற்றும் தற்காலிக முகாம்களைத் தயார்படுத்துதல், மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வார்டு வாரியாக மழைக்கால பயன்பாட்டுக்கான இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து இரண்டு முறை ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவை அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது அதிக கனமழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை சமாளிக்க 100 எச்.பி. திறன் கொண்ட 150 உயர் திறன் மோட்டார் பம்புகளும், டிராக்டர் மூலம் இயக்கப்படும் 500 மோட்டார் பம்புகளும் தயாராக உள்ளன. இதுதவிர, பல்வேறு திறன்களில் இயங்கக்கூடிய 670 மின் மற்றும் டீசல் மோட்டார் பம்புகளும் மாநகராட்சியிடம் தயார் நிலையில் உள்ளன. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 45 வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் 100 எச்.பி. மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், வரும் 15.10.2026-க்குள் 70 சதவீத மோட்டார் பம்புகள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மோட்டார் பம்புகளையும் முழுமையாக தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.