சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திசைதிருப்பவே வீட்டில் சோதனை: கே.என்.நேரு குற்றச்சாட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திசைதிருப்பவே வீட்டில் சோதனை: கே.என்.நேரு குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திசைதிருப்பவே வீட்டில் சோதனை: கே.என்.நேரு குற்றச்சாட்டு

திருச்சி: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவை எதிர்ப்பவர்கள் காலத்துக்கு ஏற்ப மாறினாலும், கட்சி தொடர்ந்து உறுதியாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “காங்கிரஸ் தொடங்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனத் தொடர்ந்து, தற்போது விஜய் வரை திமுகவை எதிர்ப்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், திமுக எப்போதும் நிலையாகவே உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காகவே எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ள நிலையில், தற்போதைய சோதனையும் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாக இருக்கக்கூடும். எனது வீட்டிலிருந்து இரண்டு மடிக்கணினிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். வேறு எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. என்னிடம் அதிகாரிகள் எந்தக் கேள்வியும் கேட்டு விசாரிக்கவில்லை. எடுத்துச் சென்ற பொருட்கள் தொடர்பாக மட்டும் என்னிடம் கையொப்பம் பெற்றனர். நான் இல்லாவிட்டாலும் திருச்சி இடைத்தேர்தலில் திமுக தொண்டர்கள் கட்சிக்காகப் பணியாற்றுவார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். திமுக என்றைக்கும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்” என்று கே.என்.நேரு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டைத் தெளிவுபடுத்துங்கள்