சட்டசபையில் வழக்கமான இடத்தை மாற்றி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சட்டசபையில் வழக்கமான இடத்தை மாற்றி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்

சட்டசபையில் வழக்கமான இடத்தை மாற்றி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக, முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை சட்டசபைக்கு வரவில்லை.இதையடுத்து, மாலை நேரத்தில் அவர் சட்டசபைக்கு வந்தார். ஆனால், முதல்-அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான இருக்கையில் அமராமல், அமைச்சர்கள் அமர்ந்திருந்த பகுதியில் சென்று அமர்ந்தார்.அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த விஜய், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். முதல்-அமைச்சர் வழக்கமான இடத்தை மாற்றி அமைச்சர்கள் மத்தியில் அமர்ந்ததற்கான காரணம் குறித்து அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவனித்து வந்தனர்.