சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

31 Aug 2026 www.thinathulir.com

சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட்

Thinathulir Reporter
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட்

தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சியினர் அமரும் வரிசையில் அமர்ந்திருந்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.இந்நிலையில், தாரகை கத்பர்ட் சட்டமன்றக்குழு தலைவராக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கான இருக்கை மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவராக உள்ள சவுமியா அன்புமணிக்கு அருகில் தாரகை கத்பர்ட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தாரகை கத்பர்ட்டிற்கு முன்வரிசையில் இருக்கை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தி.மு.க. கொறடா எ.வ.வேலு, தங்கள் தரப்பில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மேலும், தமிமுன் அன்சாரி மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என எ.வ.வேலு வலியுறுத்தினார். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.