சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு எதிர்வினையாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தங்களுக்கு பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ஆனால், முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்து உடனடியாக விவாதிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.இதனால் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது, வெளியே சென்று முழக்கங்களை எழுப்புமாறு சபாநாயகர் கூறினார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியேறியபோது, “அனுமதி கொடு, அனுமதி கொடு” என முழக்கங்களை எழுப்பினர்.