சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நடைபெறும்; அலுவல் ஆய்வுக்குழு முடிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நடைபெறும்; அலுவல் ஆய்வுக்குழு முடிவு

சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நடைபெறும்; அலுவல் ஆய்வுக்குழு முடிவு

தமிழக சட்டசபையில் இன்று 2026–27-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரையை வாசித்தார்.பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது. நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழக சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.