மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.சுமார் 20 நிமிடங்கள் பேரவையில் அமளி நீடித்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.