சசிகுமாரின் “வதந்தி 2” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

31 Jul 2026 www.thinathulir.com

சசிகுமாரின் “வதந்தி 2” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது

சசிகுமாரின் “வதந்தி 2” வெப் தொடரின்  டிரெய்லர்  வெளியானது

நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வதந்தி சீசன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘வதந்தி’ வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்கர்–காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு இசையமைப்பாளராக சைமன் பணியாற்றியிருந்தார்.முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆப் மணி’என்ற பெயரில் புதிய பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றப் பின்னணியிலான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். குஹபிரியா, எஸ். நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸே இந்த தொடரையும் இயக்கியுள்ளார்.இந்த தொடரின் முதல் தோற்றப் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில், சசிகுமார் முதல் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இயக்குநர்கள் புஷ்கர்–காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் மொத்தம் எட்டு எபிசோட்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2’ ஆகஸ்ட் 7 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனுடன், “நீங்கள் கேட்டு வந்த வதந்திகளின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. சசிகுமார் உண்மையைத் தேடும் பயணத்தை ‘வதந்தி 2’ டிரெய்லரில் காணுங்கள்” என்ற வாசகத்துடன் படக்குழு டிரெய்லரை வெளியிட்டுள்ளது.