கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

11 Sep 2026 www.thinathulir.com

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது

கோவை செட்டிபாளையம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில், கை மட்டும் வெளியே தெரிந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிபாளையம் அடுத்த ஒத்தக்கால் மண்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் காலி இடம் ஒன்று உள்ளது. அங்கு மனிதக் கை ஒன்று மண்ணுக்கு வெளியே இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரும் தடயவியல் நிபுணர்களும், குறிப்பிட்ட இடத்தைத் தோண்டி சோதனை செய்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பாழடைந்த இடத்தில் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த *துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோதோ ராம் ரியாங் (30), சுமித் குமார் (20), ஸ்ரமித் தராங் (35), சந்தோஷ் குமார் (20)** ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாதல் ஷித் (24)என்பது தெரியவந்தது. மேலும், பாதலை அடித்துக் கொலை செய்ததை 6 பேரும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.