கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ: வழிநெடுகிலும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ: வழிநெடுகிலும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ: வழிநெடுகிலும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரவேற்பு அளித்தனர். காந்திபுரத்தில் சுமார் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஏழு தளங்களுடன் அமைந்துள்ள இந்த நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் கல்வி மற்றும் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக காந்திபுரத்தில் உள்ள நூலகத்துக்குச் செல்லும் வகையில் 11.4 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ மேற்கொண்டார். அவர் செல்லும் வழித்தடத்தின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். முதல்வரைப் பார்ப்பதற்காகக் காலை முதலே பலர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். விஜய்யின் வாகனம் வந்தபோது மேளதாளங்கள் முழங்க, மலர்களைத் தூவியும் உற்சாகக் குரல்களை எழுப்பியும் மக்கள் வரவேற்றனர். அவர்களை நோக்கிக் கையசைத்தபடி முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் நூலகத்தைச் சென்றடையும் முதல்வர் விஜய், அதன் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகத்தைக் குறிக்கும் கல்வெட்டைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகளுக்கான நூலகம், வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிடுகிறார். இதன்பிறகு நூலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்லும் அவரை அமைச்சர்களும் முக்கியப் பிரமுகர்களும் வரவேற்று நினைவுப் பரிசுகளை வழங்குகின்றனர். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பாதுகாப்புப் பணியில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் முதல்வராகப் பதவியேற்ற பிறகு கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்பதால், அவரைக் காணவும் வரவேற்கவும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையொட்டி அவினாசி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நூலக வளாகத்தில் பசுமையான புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. விஜய்யின் வருகையையொட்டி கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரையிலான பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.