கோவையில் பெரியார் அறிவுலகம்: மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவையில் பெரியார் அறிவுலகம்: மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி

கோவையில் பெரியார் அறிவுலகம்: மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம்இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 2024-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டமே தற்போது கோவையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள பெரியார் அறிவுலகம் என குறிப்பிட்டுள்ளார். கோவையில் ஒரு கட்டடத்துக்கான அடிக்கல் மட்டுமின்றி, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுசார் வளர்ச்சிக்கும் அன்றைய தினம் அடித்தளம் அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.300 கோடி மதிப்பீட்டில், 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பில், ஏழு தளங்களுடன் பெரியார் அறிவுலகம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அதன் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். பெரியாரின் பெயரில் அமைந்துள்ள இந்த அறிவுலகம், இளைஞர்களிடம் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்து, அறிவின் வெளிச்சத்தைப் பரப்பும் மையமாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது வெறும் கட்டடமாக இல்லாமல், தமிழ் மாணவர்களின் எதிர்கால கனவுகளுடன் தொடர்புடைய அறிவுக் கூடமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஒரு திட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தியவரின் பங்களிப்பு வரலாற்றில் நிலைத்து நிற்கும் எனக் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை உருவாக்கிய மு.க.ஸ்டாலினுக்கு கோவை மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.