கோவை விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவை விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்!

கோவை விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்!

கோவை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை 3 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 3 நிமிடங்களைக் கடந்தும் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை ஏற்க மறுக்கும் சிலர், பார்க்கிங் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ஒரு சிலர் ஊழியர்களை தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுடன் தகராறு செய்வது மற்றும் அவர்களை தாக்குவது போன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள பார்க்கிங் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், ஊழியர்களுடன் வாக்குவாதம் அல்லது மோதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.