கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
24 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி

கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் – ஹரிபிரியா தம்பதியின் மகன் தமிழ். 4 வயதான சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர் அவனை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், சிறுவனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி சிறுவன் தமிழ் உயிரிழந்தான். 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தது குங்குமம்பாளையம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மைப் பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.