கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் பருவமழையால், அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலத்தை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவித்தது. மேலும், நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பிறகே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அருவிப் பகுதி மற்றும் வன எல்லைக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அருவியில் நீர்வரத்து சீரடைந்துள்ளதால், கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.